araikkAda mAvu 80 (Last Episode)

பிலஹரி/ஸிம்மேந்த்ரமத்யமம்        ஆதி           ரா க்ருஷ்ணமூர்த்தி (கல்கி)

வேலனையே அழைப்பாய் விந்தைக்குயிலே

கோலக்கிளியைத் துணை கூட்டிச் சென்றாகிலும் என்     (வேலனையே)

அ ப

நீலவெளி தனிலே நிமிர்ந்து பறந்து பாடி

நேரம் செய்யாமல் இந்த நிமிஷம் எழுந்து வர        (வேலனையே)

சோலையழகும் சொர்ணம், ஓடி ஒளிர்ந்து பாயும்

ஓலைக்குருத்தும் தென்னம், பாளை வெடித்த பூவும்

மாலை வெயிலும் மஞ்சள், கோலமும் கண்டு மனம்

பாலித்தருள் செய் என்று இப்பேதை உரைத்ததாக         (வேலனையே)

Bilahari/SimmEndramadhyamam     Adi      R. Krishnamurti (Kalki)

Pa

VElanaiyE azhaippAy vindaikkuyilE

KOlakkiLiyait tuNai kUTTic CenRAgilum en            (VElanaiyE)

a pa

nIlaveLi tanilE nimirndu paRandu pADi

nEram ceyyAmal inda nimisham ezhundu vara  (VElanaiyE)

Ca

sOlaiyazhagum sorNam, ODi oLirndu pAyum

Olaikkuruttum tennam, pALai veDitta pUvum

MAlai veyilum manjaL, kOlamum kaNDu manam

PAlittaruL sey enRu ippEdai uraittadAga    (VElanaiyE)

மோஹனம்/பீம்ப்லாஸ்            ஆதி          ஆனையாம்பட்டி ஆதிசேஷ ஐயர்

பல்லவி

வெண் தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயை

பண் தமிழ் இசை பாடிப்-பணிந்து கொண்டேன் (வெண்)

அனு பல்லவி

வெண் வெளி நாயகனும் வேதனும் மாயவனும்

கண்ணின் கருமணி போல் காத்திருக்கும் தாயை (வெண்)

சரணம்

அன்ன வாஹனமீதில் அமர்ந்திடும் நான் மறையாள்

சின்ன இடை நடை அழகி சீரான யாழ் உடையாள்

தூய வெண் துகில் சூடி துரியவர்க்கும் அருள் புரிவாள்

ச்ருங்க கிரி ஷாரதையாள் பாரதத்தில் பாரதியாள் (வெண்)

MOhanam/BImplAS            Adi          Anayampatti Adisesha Iyer

Pallavi

VeN tAmarai malaril vIRRirukkum tAyai

PaN tamizh isai pADip-paNindu koNDEn (VeN)

anu pallavi

ViN veLi nAyakanum vEdanum mAyavanum

KaNNin karumaNi pOl kAttirukkum tAyai (VeN)

CaraNam

anna vAhanamIdil amarndiDum nAn maRaiyAL

Cinna iDai naDai azhagi sIrAna yAzh uDaiyAL

tUya veN tughil cUDi turiyavarkkum aruL purivAL

Shrunga giri ShAradaiyAL BhAradattil BhAratiyAL (VeN)

araikkAda mAvu 79

கரஹரப்ரியா      ஆதி

வாழ்வையும் தாழ்வையும் மதியாதே நீ

மாதவன் பாதமே மறவாதே மனமே (வாழ்வையும்)

அ ப

ஏழையென்றெவரையும் இகழாதே நீ

இந்த தேஹம் நம்மோடொரு காசும் வராதே (வாழ்வையும்)

ஞானமும் செல்வமும் நம் வினைப்பயனே

நாயகன் படைப்பினில் யாவரும் ஸமமே

கானலை நீரெனக் கருதாதே துயர்க்  (கானலை)

காணும் உலகமிது மறவாதே மனமே

காணும் உலகமிதில் மலையாதே மனமே (வாழ்வையும்)

KaraharapriyA      Adi

Pa

VAzhvaiyum tAzhvaiyum madiyAdE nI

MAdavan pAdamE maRavAdE manamE (VAzhvaiyum)

a pa

EzhaiyenRevaraiyum igazhAdE nI

inda dEham nammODoru kAsum varAdE (VAzhvaiyum)

Ca

gnAnamum selvamum nam vinaippayanE

nAyakan paDaippinil yAvarum SamamE

kAnalai nIrenak karudAdE tuyark  (KAnalai)

kANum ulagamidu maRavAdE manamE

kANum ulagamidil malaiyAdE manamE (VAzhvaiyum)

ராகமாலிகை                 ஆதி                  நீலா ராமமூர்த்தி

கேதாரகௌள

பல்லவி

வேடனைப்போல் வந்து வேங்கை மரமாய்  நின்ற

வேலன் வரக்-காணேனே ஸகியே (வேடனைப்போல்)

அனு பல்லவி

ஆடி நடை நடந்தார் அன்னமே என்றழைத்தார்

தாடி நரைத்த கிழத் தாத்தாவைப்-போல் நடித்தார் (வேடனைப்போல்)

தன்யாசி

சரணங்கள்

நாளை வருவேன் எந்தன் நாயகியே உன்னை

நாலுபேர் அறியவே மாலை இடுவேன் என்றார் (வேடனைப்போல்)

காபி

வாடி உடல் சலித்தேன் வந்தனைகள் புரிந்தேன்

நாடி வந்த எந்தன் நாயகனை அழைப்பாய் (வேடனைப்போல்)

rAgAmAlikai         Adi             Neela Ramamurti

KEdAragauLa

Pallavi

VEDanaippOl vandu vEngai maramAi ninRa

VElan varak-kANEnE SakhiyE (VEDanaippOl)

anu pallavi

ADi naDai naDandAr annamE enRazhaittAr

dADi naraitta kizhat tAttAvaip-pOl naDittAr (VEDanaippOl)

dhanyAsi

CaraNangaL

nALai varuvEn endan nAyakiyE unnai

nAlupEr aRiyavE mAlai iDuvEn enrAr (VEDanaippOl)

KApi

VADi uDal salittEn vandanaigaL purindEn

nADi vanda endan nAyakanai azhaippAy (VEDanaippOl)

araikkAda mAvu 77

ஆபோகி            ஆதி              மீசு க்ருஷ்ண ஐயர்

பல்லவி

வறுமையகற்றி ஸுக வாழ்வெனக்களித்திட

வருவாய் மாருதியே எந்தன் (வறுமை)

அனு பல்லவி

கர்மவினை அகற்றிக் காப்பது உனது பாரம்

தர்மமல்லவோ ராமதாஸனே விரைவினில் (வறுமை)

சரணம்

உனையன்றி எனக்கொரு துணையுமில்லையே

உனதடி அருளும் தூய நன்னிலையே

என்னிலை அறிந்தும் நீ இரக்கமுற்றிலையே

எந்தையே மீசுக்ருஷ்ணனேற்றும் ஞானக்கலையே (வறுமை)

AbhOgi        Adi        Meesu Krishna Iyer

Pallavi

VaRumaiyagaRRi Sukha vAzhvenakkaLittiDa

VaruvAy MArutiyE endan (vaRumai)

anu pallavi

Karmavinai agaRRik kAppadu unadu bhAram

dharmamallavO rAmadASanE viraivinil (vaRumai)

CaraNam

unaiyanRi enakkoru tuNaiyumillaiyE

unadaDi aruLum tUya nannilaiyE

ennilai aRindum nI irakkamuRRilaiyE

endaiyE MIsukrushNanERRum gnAnakkalaiyE (vaRumai)

காபி                 ஆதி               சுத்தானந்த பாரதியார்

பல்லவி

வருவானோ வனக்குயிலே? நடராஜன்

வருவானோ மனக்குயிலே? (வருவானோ)

அனு பல்லவி

இருளோங்கும் தில்லையில் திரு நடனம் செய்யுமவன்

என்னுள் சேவடி வைத்தாள (வருவானோ)

சரணம்

பங்கப்பட்டு பங்கப்பட்டு உன் பாதத்தை நம்பினேன்

பாரிலுன்னையன்றி வேறு துணையில்லை

எங்கே இருக்கின்றாய் என்று நான் கதறவும்

இங்கே இருக்கிறேனென்று (வருவானோ)

KApi        Adi       Shuddhananda Bharatiyar

Pallavi

VaruvAnO vanakkuyilE? naTarAjan

VaruvAnO manakkuyilE? (VaruvAnO)

anu pallavi

iruLOngum tillaiyil tiru naTanam seyyumavan

ennuL sEvaDi vaittALa (VaruvAnO)

CaraNam

BangappaTTu bangappaTTu un pAdattai nambinEn

PArilunnaiyanRi vERu tuNaiyillai

engE irukkinRAy enRu nAn kadaRavum

ingE irukkiREnenRu (VaruvAnO)

araikkAda mAvu 78

பெஹாக்            ஆதி            ராமலிங்க அடிகள்

பல்லவி

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே (2)

வந்தாற் பெறலாம் நல்ல வரமே (வருவார்)

அனு பல்லவி

திருவார் பொன்னம்பலத்தே செழிக்கும் குஞ்சித பாதர்

சிவ சிதம்பர போதர் தெய்வ ஸபா நாதர் (வருவார்)

சரணங்கள்

சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மதுவுண்டு

தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு

இந்த வெளியில் நடமிடத்துணிந்தீரே அங்கே

இதை விடப் பெருவெளி இருக்குதென்றால் இங்கே (வருவார்)

இடுக்கில்லாமல் இருக்க இடமுண்டு நடம் செய்ய

இங்கு அம்பலம் ஒன்றங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய

ஒடுக்கில் இருப்பதென்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்

உண்மை இது வஞ்சமல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் (வருவார்)

மில்லியல் சிவகாம வல்லியுடன் களித்து

விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து

எல்லையில் இன்பம் தரவும் நல்ல ஸமயம் தான் இது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது (வருவார்)

BehAg          Adi         Ramalinga Adigal

Pallavi

VaruvAr azhaittu vADi VaDalUr vaDa tisaikkE (2)

VandAR peRalAm nalla varamE (VaruvAr)

anu pallavi

tiruvAr ponnambalattE sezhikkum kunjita pAdar

Shiva Cidambara bOdar deyva SabhA nAthar (VaruvAr)

CaraNangaL

Cindai kaLikkak kaNDu ShivAnanda madhuvuNDu

teLindOr ellArum toNDu seyyap pavuri koNDu

inda veLiyil naTamiDattuNindIrE angE

idai viDap peruveLi irukkudenRAl ingE (VaruvAr)

iDukkillAmal irukka iDamuNDu naTam ceyya

ingu ambalam onRangE eTTu ambalam uNDu aiya

oDukkil iruppadenna uLavu kaNDu koLvIr ennAl

uNmai idu vanjamalla um mEl ANai enRu sonnAl (VaruvAr)

Milliyal ShivakAma valliyuDan kaLittu

ViLaiyADavum engaL vinai ODavum oLittu

ellaiyil inbam taravum nalla Samayam tAn idu

ingumangum naTamADi irukkalAm enRapOdu (VaruvAr)

காம்போதி/கேதாரம்             ரூபகம்

வழி காட்டும் குல தெய்வம் நீயல்லவோ

சபரி மலை வாழும் மணிகண்டனே

(துரிதம்) மானில மீதினில் (வழி)

அப

எழில்மேவும் மலை வாழும் எருமேலி ஈசனே

என்னாளும் மறவேனே எனையாளும் பெருமானே (வழி)

அன்பாலே எனையாளும் என் தந்தை தாயாகி

அறிவாகி உயிராகி ஆதாரப்பொருளாகி

ஸன்மார்க நெறிகாட்டும் மெய் ஞான குருவாகி

தயங்காது வந்து தமியேன் எனை ஆட்கொண்டு (வழி)

KAmbOdi/KEdAram         rUpakam

Pa

Vazhi kATTum kula deyvam nIyallavO

Sabarimalai vAzhum maNikaNThanE

(duritam) mAnilamIdinil (Vazhi)

a.pa

ezilmEvum malai vAzum erumEli IshanE

ennALum maRavEnE enaiyALum perumAnE (Vazhi)

Ca

anbAlE enaiyALum en tandai tAyAgi

aRivAgi uyirAgi AdArapporuLAgi

SanmArga neRikATTum mey gnAna GuruvAgi

tayangAdu vandu tamiyEn enai ATkoNDu  (Vazhi)

araikkAda mAvu 76

மதுவந்தி        ரூபகம்        ஸ்வாமி ஹரிதாஸ்

வாரீரோ வந்து பெருமை காணீரோ?

ஞான தபோவனம் சென்றிடவே (வாரீரோ)

அ. ப

ஞான கணேசனும் ஞானஸ்கந்தனும்

சூழக்கொலுவிருக்கும் உருவைக்காண (வாரீரோ)

விண்ணவரும் போற்றும் வேதப்பொருளை

மண்ணகத்தே உதித்த மாசறும் பொன்னை

இகபரம் இரண்டிலும் இன்பம் தரும் முக்தியை

அகம் குளிரக் கண்டு ஆனந்தம் கொள்ள (வாரீரோ)

Madhuvanti        rUpakam           SwAmi HaridAS

Pa

VArIrO vandu perumai kANIrO?

GnAna tapOvanam cenRiDavE (VArIrO)

anu.pa

GnAna gaNEsanum gnAnaSkandanum

sUzhakkoluvirukkum uruvaikkANa (VArIrO)

Ca

ViNNavarum pORRum vEdapporuLai

MaNNagattE uditta mAsaRum ponnai

igaparam iraNDilum inbam tarum muktiyai

agam kuLirak kaNDu Anandam koLLa (VArIrO)

காமவர்தினி/பந்துவராளி             ஆதி               M பாலமுரளிக்ருஷ்ணா

பல்லவி

வருக வருக மா மயிலேறியே

தருக தருக பரிந்து உனதருளே (வருக)

அனு பல்லவி

முருகாவெனில் நெஞ்சம் உருகாதோ – உன்

அருகினில் இன்பம் பெருகாதோ (வருக)

சரணம்

அளவிலா இக மோஹத்தால் என்

உளமதில் தீரா துயருற்றேன்

கரவிலா துதி பாடி மகிழவே

முரளி கானத்தில் மயங்கியே (வருக)

KAmavardhini/PantuvarALi        Adi         M Balamuralikrishna

Pallavi

Varuga varuga mA mayilERiyE

taruga taruga parindu unadaruLE (Varuga)

anu pallavi

MurugAvenil nenjam urugAdO – un

aruginil inbam perugAdO (Varuga)

CaraNam

aLavilA iga mOhattAl en

uLamadil tIrA tuyaruRREn

KaravilA tudi pADi magizhavE

MuraLi gAnattil mayangiyE (Varuga)

araikkAda mAvu 75

காபி/பீலு         ஆதி

பல்லவி

வந்தே மாதரம் ஸதாஹம்

வந்தித ஸுஜன ஸமூஹம் தேவீ (வந்தே)

அ. பல்லவி

இந்து நிபானனா ஹிரண்மய பரணா

ஹிந்து ஜனக்ருத கரணாம் தேவீ (வந்தே)

சரணம்

ஸிந்து, கங்கா ஜல ஸம்பதாம்

விந்த்ய ஹிமாசல அலங்க்ருத ஷோபாம்

ஸகல வித்யாதரீ கருணா வாரி

ஸத்யஸ்வரூப உதாரீம் தேவீ (வந்தே)

KApi/PIlu         Adi

Pallavi

VandE mAtaram SadAham

Vandita Sujana SamUham dEvI (VandE)

a.pallavi

indu nibhAnanA hiraNmaya bharaNA

Hindu janakruta karaNAm dEvI (VandE)

CaraNam

Sindu, GangA jala SampadAm

Vindya himAcala alankruta ShObhAm

Sakala vidhyAdharI karuNA vAri

SatyaswarUpa udArIm dEvI (VandE)

ஆரபி                  ஆதி

பல்லவி

வரலக்ஷ்மி உன்னைப் பணிந்து புகழ் பாட

வரமெனக்கருள்வாய் பராசக்தியே (வரலக்ஷ்மி)

அனு பல்லவி

அரவிந்தமலர் கண்களுடையவளே

செல்விக்கரசியே சிறியேன் குரல் கேளாயோ (வரலக்ஷ்மி)

சரணம்

மந்தஹாஸ வதனி மனோன்மணி

மாணிக்க வல்லியே மரகத ராணி

மாபெரும் குற்றங்களை

க்ஷமிக்கும் க்ருபாநிதியே

மஹாலக்ஷ்மி பத்ம லோசனி (வரலக்ஷ்மி)

Arabhi          Adi

Pallavi

Varalakshmi unnaip paNindu pugaz pADa

VaramenakkaruLvAy parAsakthiyE (Varalakshmi)

anu pallavi

aravindamalar kaNgaLuDaiyavaLE

selvikkarasiyE siRiyEn kural kELAyO (Varalakshmi)

CaraNam

MandahASa vadani manOnmaNi

MANikka valliyE maragatha rANi

MAperum kuRRangaLai

Kshamikkum krupAn2idhiyE

MahAlakshmi padma lOcani (Varalakshmi)

araikkAda mAvu 74

(தாய் தந்தையரை நமஸ்கரித்தல்)

பெஹாக்                ஆதி               மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பல்லவி

உற்றவரே எனைப் பெற்றவரே தினம்

உமக்கே நமஸ்காரம் (உற்றவரே)

அனு பல்லவி

முற்றுமே நீர் செய்த உதவிக்கு நான்

என்ன மொழிவேன் உபசாரம் (உற்றவரே)

சரணங்கள்

பத்து மாதம் என்னை வயிற்றிலே சுமந்து

பல துயர் சகித்தீரே

எத்தனை ப்ராண ஸங்கடமுடனே எனை

ஈன்று நிர்வகித்தீரே (உற்றவரே)

பெற்றீர் வளர்த்தீர் பெயரும் இட்டீர் ஜீவ

ப்ரதிஷ்டை செய்வித்தீரே

உற்ற உம் உதிரத்தை முலைப்பாலாகவே

ஊட்டியே உய்வித்தீரே (உற்றவரே)

தேனினும் அமிர்தினும் இனிதே எனக்கு நீர்

செப்பிய தாலாட்டு

வானினும் அமரர்க்கு வருமோ இது போல்

மங்களத்திருப்பாட்டு  (உற்றவரே)

மாந்த வியாதிகள் எனை அணுகாமலெ

மருந்துகள் கொடுத்தீரே

வாந்தியும் மலஜலம் அசுத்தமும் ஸஹித்தெனை

மார்புற எடுத்தீரே (உற்றவரே)

உடல் உயிர் ஸகலமும் நீர் தந்ததேயன்றி

உண்டோ இனிவேறு

அடரும் உலகெலால் அளித்தாலும் இப்போது

ஆமோ கைம்மாறு (உற்றவரே)

ஜீவன் போல் நீர் என்னை வளர்த்திட்ட அருமையைச்

செப்ப என்னால் ஆமோ

நாவே ஆயிரம் இருக்கினும் நீர் செய்த

நன்மையை சொலப்போமோ (உற்றவரே)

கவலை எல்லாம் என் கவலையல்லால் வேறு

கவலையென்றறியீரே

புவியிலே என் சுகம் அல்லது வேறொரு

பொருளையுங்குறியீரே (உற்றவரே)

பால வியாதிகள் எனை அணுகாமலே

பயித்தியம் பிடித்தீரே

காலமெல்லாம் பா3ல விரதங்கள்  அனுஷ்டித்துக்

கருமங்கள் முடித்தீரே (உற்றவரே)

இரவு முழுதுமே தூங்காதிருந்து நீர்

எந்தனைக் காத்தீரே

அரவு முதற் பல ஜந்துக்களால் வரும்

ஆபத்தை தீர்த்தீரே (உற்றவரே)

தரணியில் என் ஸுகம் வேண்டி நீர் பல

தருமங்கள் செய்தீரே

கருணை செய்யும்படி கடவுளை துதித்து நற்

காணிக்கை பெய்தீரே (உற்றவரே)

சற்று நீர் என்னை முன் மறந்திருந்தால் நான்

சடலம் பொறுப்பேனோ

உற்ற உலகிலே இன்னாள் மட்டும் நான்

உயிர் வாழ்ந்திருப்பேனோ (உற்றவரே)

காணாத்தெய்வத்தின் அருளாலே வந்த

கண்கண்ட தெய்வம் நீரே

ஆணாப்பெண்ணாய் இரா அந்தத்தேவையும்

அன்னை தந்தை யென்பாரே (உற்றவரே)

எமக்கொரு ஸுகம் வரில் உமக்கு வந்ததுபோல்

எக்களிப்படைந்தீரே

எனக்கொரு துயர் வரில் உமக்கு வந்ததுபோல

ஏங்கி உள்ளுடைந்தீரே (உற்றவரே)

பாலும் சோறும் பக்ஷணங்களும் எனக்கிட்டுப்

பழஞ்சோறுண்டீரே

காலமெல்லாம் நல்ல ஸோமன் நான் உடுக்க நீர்

கந்தையைக் கொண்டீரே (உற்றவரே)

சப்பரமஜத்தில் நான் படுத்துறங்க நீர்

தரையிலே படுத்தீரே

கைப்பொருளெல்லாம் என் நிமித்தம் பரி

காரிக்குக்கொடுத்தீரே (உற்றவரே)

வாக்கால் உளரும் என் மழலைச்சொல் கேட்டு நீர்

மகிழ்ந்தே துதித்தீரே

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்

கரிசனம் பதித்தீரே (உற்றவரே)

குற்றம் எத்தனையோ செய்தேன்

குணமாய்க்கொண்டீரே

சற்றும் நான் நோய் கொள்ளில் அன்னம் நித்திரையின்றித்

தளர்ந்து மெய் துவண்டீரே (உற்றவரே)

தோளினும் மார்பினும் இடையினுமே எனைத்

தூக்கிக்கொண்டலைந்தீரே

நீள் பஞ்ச காலத்தில் உள்ள சோறு எனக்கிட்டு

நீர் பசித்துலைந்தீரே (உற்றவரே)

சுய நலம் வேண்டி இங்கொருவர்க்கொருவர்

துணை செய்வர் மெய் தானே

பயனொன்றும் வேண்டாதெனை நீர் வளர்த்திட்ட

பக்ஷம் சொல்வேனே (உற்றவரே)

உறவினரெல்லாம் உம்மாலே வந்த

உறவினர் தாமல்லவோ

அறநெறி காட்டும் குருவமே நீரெனில்

அயலின் என் சொல்லவோ (உற்றவரே)

பல பொருள் எனக்குச் சம்பாதித்து வைக்கவே

பலவிதம் உழைத்தீரே

நிலமிசை உம்முயிர்க் குயிர் நானே என்று

நினைத்து நீர் பிழைத்தீரே (உற்றவரே)

தாரம் போனால் மறு தாரம் வருவாள் பெற்ற

தனயரும் அப்படியே

நீர் போனால் வேறு தாய் தந்தையர் வந்து

நேருவதெப்படி (உற்றவரே)

தக்க பருவத்தில் எனை அடக்கிப்பாட

சாலையில் விட்டீரே

பக்கமெல்லாந்திரிந்து என்னாலே பல

பாடுகள் பட்டீரே (உற்றவரே)

இளந்தைப்பருவத்தில் என்னால் வருந்துன்பம்

எல்லாம் பொறுத்தீரே

தளர்ந்த பருவத்தில் உம்மால் வருந்துன்பம்

சகிப்பது பெருஞ்சீரே (உற்றவரே)

துக்கங்களெல்லாம் நிர்வகித்துக் கொண்டு

ஸுகம் எனக்களித்தீரே

மக்களே ஸகல பாக்யமென்றெண்ணி

மனம் மிகக் களித்தீரே (உற்றவரே)

மண்பிள்ளையாயினும் தன் பிள்ளையென்றெனை

மகிழ்ந்தாதரித்தீரே

பண்புடன் என் பொருட்டாக நீர் பலரையும்

பணிந்து உபசரித்தீரே (உற்றவரே)

தெரியாமல் நான் செய்த பிழை பொறுத்து என்னிடம்

திருவருள் பதிப்பீரே

அரும் வேத நாயகன் அருள் செய்யும்படி என்னை

ஆசீர்வதிப்பீரே (உற்றவரே)

(Prostrating parents)

BehAg          Adi        Mayuram Veda nAyakam Pillai

Pallvi

uRRavarE enaip peRRavarE dinam

umakkE namaSkAram (uRRavarE)

anu pallavi

MuRRumE nIr seyda udavikku nAn enna

MozhivEn upacAram (uRRavarE)

CaraNangaL

Pattu mAdam ennai vayiRRilE sumandu

Pala tuyar sagittIrE

ettanai prANa SankaTaDamuDanE enai

InRu nirvagittIrE (uRRavarE)

PeRRIr vaLarttIr peyarum iTTIr jIva

PratishTai seyvittIrE

uRRa um udirattai mulaippAlAgavE

UTTiyE uyvittIrE (uRRavarE)

tEninum amirdinum inidE enakku nIr

seppiya tAlATTu

VAninum amararkku varumO idu pOl

MangaLattiruppATTu (uRRavarE)

MAnda viyAdigaL enai aNugAmale

MarundugaL koDuttIrE

VAndiyum malajalam asuddamum Sahiittenai

MArbuRa eDuttIrE (uRRavarE)

uDal uyir Sakalamum nIr tandadEyanRi

uNDO inivERu

aDarum ulagelAl aLittAlum ippOdu

AmO kaimmARu (uRRavarE)

JIvan pOl nIr ennai vaLarttiTTa arumaiyaic

Ceppa ennAl AmO

nAvE Ayiram irukkinum nIr seyda

nanmaiyai solappOmO (uRRavarE)

Kavalai ellAm en kavalaiyallAl vERu

KavalaiyenRaRiyIrE

BhuviyilE en sukham alladu vERoru

PoruLaiyunkuRiyIrE (uRRavarE)

BAla viyAdigaL enai aNugAmalE

Payittiyam piDittIrE

KAlamellAm bAla viratangaL  anushTittuk

KarumangaL muDittIrE (uRRavarE)

iravu muzudumE tU#ngAdirun2du nIr

endanaik kAttIrE

aravu mudaR pala jandukkaLAl varum

Abattai tIrttIrE (uRRavarE)

taraNiyil en Sukham vENDi nIr pala

daruma#ngaL ceydIrE

KaruNai seyyumpaDi kaDavuLai tudittu naR

KANikkai peydIrE (uRRavarE)

saRRu nIr ennai mun maRandirundAl nAn

CaDalam poRuppEnO

uRRa ulagilE innAL maTTum nAn

uyir vAzndiruppEnO (uRRavarE)

KANAtteyvattin aruLAlE vanda

KaNkaNDa deyvam nIrE

ANAppeNNAy irA andattEvaiyum

annai tandai yenbArE (uRRavarE)

emakkoru Sukham varil umakku vandadupOl

ekkaLippaDaindIrE

enakkoru tuyar varil umakku vandadupOla

E#ngi uLLuDaindIrE (uRRavarE)

PAlum cORum bakshaNangaLum enakkiTTup

PazancORuNDIrE

KAlamellAm nalla SOman nAn uDukka nIr

Kandaiyaik koNDIrE (uRRavarE)

Capparamajattil nAn paDuttuRanga nIr

taraiyilE paDuttIrE

KaipporuLellAm en nimittam pari

KArikkukkoDuttIrE (uRRavarE)

VAkkAl uLarum en mazalaiccol kETTu nIr

MagizndE tudittIrE

KAkkaikkum tan ku~ncu pon ku~ncu enbadu pOl

Karicanam padittIrE (uRRavarE)

KuRRam ettanaiyO seydEn

GuNamAykkoNDIrE

CaRRum nAn nOy koLLil annam nittiraiyinRit

taLarndu mey tuvaNDIrE (uRRavarE)

tOLinum mArbinum iDaiyinumE enait

tUkkikkoNDalaindIrE

nIL panca kAlattil uLLa cORu enakkiTTu

nIr pacittulaindIrE (uRRavarE)

suya nalam vENDi i#ngoruvarkkoruvar

tuNai seyvar mey tAnE

PayanonRum vENDAdenai nIr vaLarttiTTa

Paksham solvEnE (uRRavarE)

uRavinarellAm ummAlE vanda

uRavinar tAmallavO

aRan2eRi kATTum GuruvamE nIrenil

ayalin en sollavO (uRRavarE)

Pala poruL enakkuc cambAdittu vaikkavE

Palavidam uzaittIrE

nilamicai ummuyirk kuyir nAnE enRu

ninaittu nIr pizaittIrE (uRRavarE)

tAram pOnAl maRu tAram varuvAL peRRa

tanayarum appaDiyE

nIr pOnAl vERu tAy tandaiyar vandu

nEruvadeppaDi (uRRavarE)

takka paruvattil enai aDakkippADa

sAlaiyil viTTIrE

PakkamellAn2tirin2du ennAlE pala

PADugaL paTTIrE (uRRavarE)

iLandaipparuvattil ennAl varun2tunbam

ellAm poRuttIrE

taLarnda paruvattil ummAl varun2tunbam

sakippadu peru~ncIrE (uRRavarE)

dukka#ngaLellAm nirvagittuk koNDu

Sukham enakkaLittIrE

MakkaLE Sakala bAgyamenReNNi

Manam migak kaLittIrE (uRRavarE)

MaNpiLLaiyAyinum tan piLLaiyenRenai

Magizn2dAdarittIrE

PaNbuDan en poruTTAga nIr palaraiyum

PaNin2du upacarittIrE (uRRavarE)

teriyAmal nAn ceyda pizai poRuttu enniDam

tiruvaruL padippIrE

arum vEda nAyakan aruL seyyumbaDi ennai

AsIrvadippIrE  (uRRavarE)

ஸ்ரீரஞ்சனி             ரூபகம்

உயர்வும் தாழ்வும் ஏது மனித

உலகிற் சிறந்த குணமல்லாது? (உயர்வும்)

அ ப

இயலும் இறைவன் ஸாயி அருள்

எளியரென்றும் தனிகரென்றும் (உயர்வும்)

நாதனளித்த பாரம் இதில்

நமக்கில்லை அதிகாரம்

பேதம் நினைக்கலாமோ?

பிறரை இழிவு கருதலாமோ? (உயர்வும்)

SrIranjani          rUpakam

Pa

uyarvum tAzhvum Edu manida

ulagiR ciRanda guNamallAdu? (uyarvum)

a pa

iyalum iRaivan SAyi aruL

eLiyarenRum dhanikarenRum (uyarvum)

Ca

nAdanaLitta bAram idil

namakkillai adikAram

bEdam ninaikkalAmO?

PiRarai izhivu karudalAmO? (uyarvum)

araikkAda mAvu 73

பாகேஷ்வரி          ஆதி

பல்லவி

உன்னைக்கண்டதும் உள்ளம் உவகை

கொள்வது ஏனய்யா செந்தில் வேலய்யா (உன்னை)

அனு பல்லவி

அன்னை பராசக்தி அணைத்த குமர வேளே

தேனாய்ப் பெருகும் தமிழ் தானாய் இசைக்கும்

நல்ல தமிழ் இசைக்கும் (உன்னை)

சரணம்

மானைத்தொடர்ந்து போய் மையல் மொழியாள்

மங்கை குற வள்ளியை மணந்த செங்கதிர்வேலா

ஊணுறக்கமின்றி உந்தன் நினைவானேன் எனை

ஏறெடுத்துப் பாராதிருக்க நீ கற்ற வித்தை தான் என்னய்யா (உன்னை)

BhAgEshwari          Adi

Pallavi

unnaikkaNDadum uLLam uvagai

koLvadu EnayyA sendil vElayyA (unnai)

anu pallavi

annai ParAsakti aNaitta Kumara vELE

tEnAyp perugum tamizh tAnAy isaikkum

nalla tamizh isaikkum (unnai)

CaraNam

MAnaittodarndu pOy maiyal mozhiyAL

Mangai kuRa vaLLiyai maNanda senkadirvElA

UNuRakkaminRi undan ninaivAnEn enai

EReDuttup pArAdirukka nI kaRRa viddai tAn ennayyA (unnai)

ஸுரடி                ஆதி                 நீலகண்ட சிவன்

பல்லவி

உன்னைத் தவிற வேறில்லை கதி எனக்கு (உன்னை)

அனு பல்லவி

அன்னை தந்தையும் நீயே அகில பந்துவும் நீயே

அன்னை உமையாள் நேயா அன்பர்க்கருள் ஸஹாயா (உன்னை)

சரணங்கள்

பகலும் இரவும் நீயே பலதாம் தெய்வமும் நீயே

ஸுகமும் துக்கமும் நீயே ஸோம சூடாமணியே (உன்னை)

இகமும் பரமும் நீயே எல்லாப் பொருளும் நீயே

ஸகல கலையும் நீயே சம்போ தயா நிதியே (உன்னை)

கண்டவையும் நீயே காணாதவையும் நீயே

கண்டார் காக்ஷியே நீலகண்ட க்ருபா நிதியே (உன்னை)

SuraTi        Adi       Neelakantha Sivan

Pallavi

unnait taviRa vERillai gati enakku (unnai)

anu pallavi

annai tandaiyum nIyE akhila bandhuvum nIyE

annai umaiyAL nEyA anbarkkaruL SahAyA (unnai)

CaraNangaL

Pagalum iravum nIyE paladAm deyvamum nIyE

Sukhamum dukkamum nIyE SOma CUDAmaNiyE (unnai)

igamum paramum nIyE ellAp poruLum nIyE

Sakala kalaiyum nIyE sambhO dayA nidhiyE (unnai)

kaNDavaiyum nIyE kANAdavaiyum nIyE

kaNDAr kAkshiyE nIlakaNTha krupA nidhiyE (unnai)

araikkAda mAvu 72

ஸிம்மேந்த்ர மத்யமம்         ஆதி        கவிகுஞ்சரபாரதி

பல்லவி

உன்னையல்லால் வேறே கதி எனக்குண்டோ சொல்வாய்

நீயே அருள்வாய் பரம க்ருபாநிதி (உன்னை)

அனுபல்லவி

கனைகடல் சூழ் உலகம் தனிலே கந்தா

இகபரஸுகம் தந்தெனையாளவே (உன்னை)

சரணம்

அம்மே எனக்கருள் என் அப்பா எனவே சொல்லி

யுமே குஞ்சரதாஸனுமே உனைப்பணிந்தேன்

கைமேல் பலன் அருள் தெய்வமே துணை செய்தருள்

ப்ரம்மேந்திரர்க்கரிய ஸிம்மேந்த்ரமத்யமம் (உன்னை)

SimmEndra madhyamam         Adi        KavikunjarabhArati

Pallavi

unnaiyallAl vERE gati enakkuNDO solvAy

nIyE aruLvAy parama krupAn2idi (unnai)

anupallavi

KanaikaDal sUz ulagam tanilE kandA

igaparasukham tandenaiyALavE (unnai)

CaraNam

ammE enakkaruL en appA enavE solli

yumE KunjaradASanumE unaippaNindEn

KaimEl palan aruL deyvamE tuNai seydaruL

BrammEndirarkariya SimmEndramadhyamam (unnai)

கீரவாணி                 ஆதி               சீர்காழி முத்துத்தாண்டவர்

பலவி

உன்னை நம்பினேன் அய்யா –  நான் (உன்னை)

அனு பல்லவி

நாகம் புனை சம்போ நடராஜா

புலியூர் வாழ் ஈசா (உன்னை)

சரணங்கள்

இருவர் தம் இசை கொண்ட காதா

தித்தி என நின்று நடம் செய்யும் இங்கித பொற்பாதா

திரு நாவலூரன் விடு தூதா

தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உன்னை)

மழுவினைத் தரிக்கின்ற கையா

கொன்றை மலர் மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா

எழு புலி துதிக்கின்ற துய்யா

அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா (உன்னை)

நெடியமால் அயன் தேடிக் காணா தெங்கும் நிறைந்தவா

எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா

அடியவர் தொழும் தமிழ்ப்பாணா

தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உன்னை)

KIravANi                       Adi           Seerkazhi Muttuttandavar

Palavi

unnai nambinEn ayyA – nAn (unnai)

anu pallavi

nAgam punai ShambhO naTarAjA

PuliyUr vAzh IshA (unnai)

CaraNangaL

iruvar tam isai koNDa kAdA

ditti ena ninRu naTam ceyyum ingita poRpAdA

tiru nAvalUran viDu dUtA

tillai ShivakAmi oru bhAgA Cidambara nAthA (unnai)

Mazhuvinait tarikkinRa kaiyA

KonRai malar mAlai punaiginRa vaDisuDar meyyA

ezhu puli tudikkinRa tuyyA

anbar iDamAy irundinbam uDanALum ayyA (unnai)

neDiyamAl ayan tEDik kANA dengum niRaindavA

elumbellAm aNindiDum pUNA

aDiyavar tozhum tamizhppANA

tillaiyampadi naTarAjA ambalavANA (unnai)

araikkAda mAvu 71

See remarks in the YouTube ‘araikkAda mAvu 71’

பேகடா        ஆதி

பல்லவி

உல்லாஸமான பெண்ணே

ஒய்யாரமான கண்ணே

உப்புமாவைக் கிண்டிப்பாரடி நீ (உப்புமாவை)

அபல்லவி

ஒரு படி ரவை போட்டு

கால் பிடி உப்பு போட்டு (உப்புமாவை)

சரணம்

காயம், கறிவேப்பிலை கடுகு மிளகாய் சேர்த்து

உளுத்தம் பருப்புடனே மிளகும் சேர்த்து

இஞ்சியும் முந்திரியும் சேர்த்து

ஒரு ஸ்பூன் நெய் விட்டு நீ (உப்புமாவை)

BEgaDA          Adi

Pallavi

ullASamAna peNNE

oyyAramAna kaNNE

uppumAvaik kiNDippAraDi –nI (uppumAvai)

a.pallavi

oru paDi ravai pOTTu

KAl piDi uppu pOTTu (uppumAvai)

CaraNam

KAyam, KaRivEppilai KaDugu miLagAy cErttu

uLuttam paruppuDanE miLagum cErttu

injiyum mundiriyum cErttu

oru Spoon ney viTTu nI (uppumAvai)

ஹரிகாம்போதி               ரூபகம்             பாபநாசம் சிவன்

பல்லவி

உண்டென்று உறுதி கொள்வாய் மனமே உலகில்

ஒரே தெய்வம் (தெய்வமொன்று) (உண்டென்று)

அனு பல்லவி

அண்ட பிண்டம் எதிலும் நிறைந்து

அங்கும் இங்கும் தங்குமொருவன் (உண்டென்று)

சரணம்

பல கோடி உயிரினங்கள்

படைத்தாட்டும் வித்தை காட்டி

பலபேரில் (பல கோடி) ஸமயம் நாட்டிப்

பல நாமரூபமோடு விளங்கும் ஒரே தெய்வம் (உண்டென்று)

எம்மதத்தும் உண்மை உண்டு

அஃதில்லையேல் நிலை பெறுவதென்று

பன்மதங்கள் ஆய்ந்து தெய்வப்பழி

பொழிந்து விழித்தெழுந்து (உண்டென்று)

காமனையும் ஏமனையும்

கடிந்து ஆலவாயில் வாழும்

ஸோமசேகரன் மீனாக்ஷி

ஸுந்தரம் என்று – உந்தன் உறவொன்று (உண்டென்று)

HarikAmbOdi         rUpakam       Papanasham Shivan

Pallavi

uNDenRu uRudi koLvAy manamE ulagil

orE deyvam (deyvamonRu) (uNDenRu)

anu pallavi

aNDa piNDam edilum niRaindu

angum ingum tangumoruvan (uNDenRu)

CaraNam

Pala kOTi uyirinangaL

PaDaittATTum vittai kATTi

PalapEril (pala kOTi) Samayam nATTip

Pala nAmarUpamODu viLangum orE deyvam (uNDenRu)

emmadattum uNmai uNDu

aH2tillaiyEl nilai peRuvadenRu

PanmadangaL Ayndhu deyvappazhi

Pozhindu vizhittezhundhu (uNDenRu)

KAmanaiyum Emanaiyum

KaDindu AlavAyil vAzhum

SOmasEkaran mInAkshi

Sundaram enRu – undan uRavonRu (uNDenRu)